தானேயில் ஒரே நாளில் மழைக்கு 3 பேர் பலி


தானேயில் ஒரே நாளில் மழைக்கு 3 பேர் பலி
x

தானேயில் ஒரே நாளில் மழைக்கு 3 பேர் பலியானார்கள்.

தானே,

தானேயில் ஒரே நாளில் மழைக்கு 3 பேர் பலியானார்கள்.

மும்பை, தானேயில் மழை

மும்பை, தானேயில் கடந்த திங்கட்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் மும்பை, தானேயில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக தானேயில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் வீடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 வரையிலான 24 மணி நேரத்தில் மும்பை நகர் பகுதியில் 4 செ.மீ., கிழக்கு புறநகரில் 6.6 செ.மீ., மேற்கு புறநகரில் 6.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தானேயில் 12 செ.மீ. மழை

அதே நேரத்தில் தானேயில் நகர் பகுதியில் 24 மணி நேரத்தில் 12.2 செ.மீ. மழை கொட்டி தீர்த்து உள்ளது. இந்த பருவமழை காலத்தில் ஒரே நாளில் தானே நகரில் பதிவான அதிகபட்ச மழை இது என தானே பேரிடர் மேலாண்மை பிரிவு தலைவர் அவினாஷ் சாவந்த் கூறினார்.

மழை காரணமாக நேற்று தானேயில் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன.

3 பேர் பலி

மேலும் தானே, பிவண்டி பகுதியில் மழைக்கு 3 பலியாகி உள்ளனர். இதில் சுபாஷ் நகர் பகுதியில் மின்சார நிறுவன ஊழியர் ஒருவர் தவறுதலாக ஆற்றில் விழுந்து பலியானார். திவான்சா தா்க்கா பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சாக்கடை கால்வாயில் விழுந்து குல்னாஷ் அன்சாரி என்ற 5 சிறுமி உயிரிழந்தார்.

இதேபோல சோனாலே கிராமப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி ஒருவர் பலியானார். தானேயில் ஒரே நாளில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story