நவிமும்பை, பால்கரில் கஞ்சா, குட்கா கடத்திய 3 பேர் கைது
நவிமும்பை, பால்கரில் கஞ்சா, குட்கா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
நவிமும்பை ஐரோலி பகுதியில் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக மும்பை போதைத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு வந்த 2 கார்களில் சோதனை நடத்தினர். இதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 266 கிலோ எடையுள்ள கஞ்சாவை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் 2 கார்கள், போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அஸ்வின் குமார் (32), ராஜூ லோகர் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதேபோல பால்கர் மாவட்டம் நந்தோரே நாக்கா பகுதியில் காரில் கடத்தி வந்த குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சத்து 67 ஆயிரம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குட்கா கடத்தி வந்தவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---------------------