தானேயில் 29 கி.மீ.க்கு வெளிவட்ட மெட்ரோ ரெயில் திட்டம் - மத்திய அரசிடம் முதல்-மந்திரி ஷிண்டே கோரிக்கை


தானேயில் 29 கி.மீ.க்கு வெளிவட்ட மெட்ரோ ரெயில் திட்டம் - மத்திய அரசிடம் முதல்-மந்திரி ஷிண்டே கோரிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் 29 கி.மீ.க்கு வெளிவட்ட மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்க மத்திய அரசிடம் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை வைத்து உள்ளார்.

தானே,

தானேயில் 29 கி.மீ.க்கு வெளிவட்ட மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்க மத்திய அரசிடம் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை வைத்து உள்ளார்.

வெளிவட்ட மெட்ரோ ரெயில்

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தானே நகரை சுற்றி வரும் வகையில் வெளிவட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அனுமதி கேட்டு உள்ளார். இதுகுறித்து தானே மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தானேயில் 29 கி.மீ. வெளிவட்ட மெட்ரோ திட்டத்துக்கு முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரியை சந்தித்து தானே வெளிவட்ட மெட்ரோ திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் தருமாறு கேட்டு உள்ளார்.

22 ரெயில் நிலையங்கள்

22 ரெயில் நிலையங்களுடன் அமைய உள்ள தானே வெளிவட்ட மெட்ரோ திட்டம் 26 கீ.மி.க்கு ஆகாயத்திலும், 3 கி.மீ.க்கு சுரங்கத்திலும் அமைகிறது. இதில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்கள், தானே ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story