சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல்; சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தணடனை விதிக்கப்பட்டது.
தானே,
சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தணடனை விதிக்கப்பட்டது.
13 வயது சிறுமி
தானே மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது இஸ்லாம். இவருக்கும், அவர் வசித்துவந்த பகுதியில் மளிகை கடைக்கு நடத்தி வந்த பெண்ணின் 13 வயதுடைய மகளுக்கும் இடையே பொருட்கள் வாங்க செல்லும்போது பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் முகமது இஸ்லாம் சிறுமியிடம் நைசாக பேசி ஆசை வார்த்தைகளை கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமி இதேபோல பலமுறை தனது பாலியல் இச்சைகளுக்கு அவர் இணங்க வைத்துள்ளார். இதன்காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் சிறுமி கர்ப்பம் ஆனாள். இது பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் முகமது இஸ்லாம் மீது போலீசில் புகார் அளித்தனர்.
கடுங்காவல்
இந்த புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து முகமது இஸ்லாமை கைது செய்தனர். மேலும் போக்சோ சிறப்பு கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டில் விசாரணையில் 6 பேர் அவருக்கு எதிராக சாட்சி அளித்தனர். இதன்மூலம் அவர் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானது. இதனை தொடர்ந்து நீதிபதி வி.வி, வீர்கர் குற்றவாளியான முகமது இஸ்லாமிற்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.