பன்வெலில் விநாயகர் சிலை கரைப்பின் போது மின்சாரம் தாக்கி 9 மாத குழந்தை உள்பட 11 பேர் காயம்


பன்வெலில் விநாயகர் சிலை கரைப்பின் போது மின்சாரம் தாக்கி 9 மாத குழந்தை உள்பட 11 பேர் காயம்
x

பன்வெலில் விநாயகர் சிலை கரைப்பின் போது மின்சாரம் தாக்கி 9 மாத குழந்தை உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

மும்பை,

பன்வெலில் விநாயகர் சிலை கரைப்பின் போது மின்சாரம் தாக்கி 9 மாத குழந்தை உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

மின்சார வயர் அறுந்தது

நவிமும்பை பன்வெல் கோலிவாடா பகுதியில் உள்ள நீர் நிலையில் விநாயகர் சிலைகள் கரைக்க பன்வெல் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் சிலைகளை கரைத்து கொண்டு இருந்தனர்.

சிலை கரைப்பு வசதிக்காக அந்த பகுதியில் மின் விளக்குகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த விளக்குகளுக்கு அருகில் உள்ள ஜெனரேட்டரில் இருந்து மின்சாரம் வந்து கொண்டு இருந்தது.

இந்தநிலையில் திடீரென மின் விளக்குக்கு சென்ற வயர் அறுந்து உல்வே பகுதியை சேர்ந்த மனாஸ் கும்பர் (வயது 17) என்ற வாலிபர் மீது விழுந்தது. இதையடுத்து வாலிபரை காப்பாற்ற முயன்றவர்கள் மீதும் மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

11 பேர் காயம்

இந்தநிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மின்சாரம் தாக்கி காயமடைந்த 9 மாத குழந்தை உள்பட 11 பேரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த 2 பேர் உள்பட 4 பேர் பன்வெல் லைப்லைன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்த தன்ஷிகா என்ற 9 மாத குழந்தை உள்பட 7 பேர் பன்வெல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து கோலிவாடா பகுதியில் சிலை கரைப்பது நிறுத்தப்பட்டது. பொது மக்கள் அருகில் உள்ள மற்ற இடத்தில் சிலைகளை கரைத்தனர்.


Next Story