கனடா நாட்டு தம்பதிக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு- தீர்ப்பாயம் உத்தரவு


கனடா நாட்டு தம்பதிக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு- தீர்ப்பாயம் உத்தரவு
x

விபத்தில் காயமடைந்த கனடா நாட்டு தம்பதிக்கு ரூ.10.94 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

தானே,

விபத்தில் காயமடைந்த கனடா நாட்டு தம்பதிக்கு ரூ.10.94 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

விபத்தில் தம்பதி காயம்

கனடா நாட்டின் ஒன்ட்ரியா பகுதியை சேர்ந்தவர் பிபின்சந்திரா. இவரது மனைவி அர்ச்சனா. சுற்றுலாவிற்காக கடந்த 2011-ம் ஆண்டு நவிமும்பைக்கு வந்திருந்தனர். இதன் பின்னர் உத்தரகாண்ட் மாநிலம் கலாடுங்கி என்ற இடத்திற்கு காரில் சென்றனர். அப்போது கார் அதிவேகமாக சென்றதால் ஏற்பட்ட விபத்தில் தம்பதி படுகாயமடைந்தனர். இதனால் அவர்கள் மொராதபாத் மற்றும் ஹல்த்வானி பகுதியில் சிகிச்சை பெற்றனர்.

மேல்சிகிச்சைக்காக மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர். மும்பையில் சிகிச்சை பெற்று கனடா திரும்பினர்.

இழப்பீடு

இந்த விபத்தால் தங்களது அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தங்களுக்கு இழப்பீடு தரும்படி சுற்றுலா அழைத்து சென்ற கார் உரிமையாளரிடம் கேட்டனர். இழப்பீடு தர மறுத்ததால் மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் சிகிச்சைக்காக ரூ.13 லட்சம் செலவழித்ததாகவும், தங்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கும்படி வழக்கு தொடர்ந்தனர்.

விசாரணை நிறைவடைந்த நிலையில் விபத்தில் காயமடைந்த தம்பதிக்கு வழக்கு தொடுத்த நாளில் இருந்து ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டியுடன் சேர்த்து பிபின்சந்திராவிற்கு ரூ.6 லட்சத்து 84 ஆயிரமும், அவரது மனைவிக்கு ரூ.4 லட்சத்து 10 ஆயிரமும் இழப்பீடாக காப்பீடு நிறுவனம் மற்றும் சுற்றுலா கார் உரிமையாளர் இணைந்து மொத்தம் ரூ.10 லட்சத்து 94 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.


Next Story