யோகா பயிற்சியால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகிறது- பசவராஜ் பொம்மை பேச்சு


யோகா பயிற்சியால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகிறது- பசவராஜ் பொம்மை பேச்சு
x

யோகா பயிற்சியால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகிறது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:

பெங்களூரு அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா பயிற்சி குறித்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

உடல் பிரச்சினைகள்

யோகா பயிற்சியால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகிறது. ஒவ்வொரு குழந்தையிடமும் யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவை வளமான நாடாக மாற்றும் கனவு நனவாக வேண்டும். மன அமைதிக்கு யோகா பயிற்சி மற்றும் தியானம் பெரும் உதவியாக உள்ளது. இன்றைய உலகில் மக்கள் பணம் சேர்ப்பதை தட்டுமே குறியாக கொண்டு செயல்படுகிறார்கள்.

இந்த நிலை மாறி மனிதர்களின் நலனை குறியாக கொண்டு செயல்பட்டால் உலகமே ஒரு அழகான இடமாக மாறும். மனிதர்களுக்கு இருக்கும் சிந்திக்கும் திறன் அபூர்வமானது. மனிதர்களுக்குள் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது. நமது உடல் பிரச்சினைகள் அனைத்திற்கும் யோகாவில் தீர்வு உள்ளது. உடல் மற்றும் மனதை பலமாக வைத்துக்கொள்ள யோகா உதவுகிறது.

வாழ்க்கையில் சிரிப்பு

சுய கட்டுப்பாட்டுடன் இருப்பவரே உண்மையானயோகி. யோகியாக இருப்பவரால் மட்டுமே யுக புருஷராக முடியும். சாதனையாளருக்கு சாவு இறுதி கிடையாது. தனது சாவுக்கு பிறகும் வாழ்பவர் சாதனையாளர். திருப்திகரமான வாழ்க்கையை வாழ சுகாதாரமான உடல் மற்றும் மனது அவசியம். இறைவன் வழங்கியதை யோகா மூலம் அதை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

யாருடைய வாழ்க்கையில் சிரிப்பு உள்ளதோ அவர்கள் அர்த்த பூர்வமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். வாழ்க்கையில் சிறிய சிறிய ஆனந்தத்தை பெற வேண்டும். மனதை கட்டுப்படுத்தி வாழ வேண்டும். ஆரோக்கியமான உடலால் மட்டுமே அறிவியல் பூர்வமாக சிந்திக்க முடியும். யோகா ஒரு அறிவியல்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story