சோமநாதபுரா சென்னகேசவா கோவில் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இடையூறு கொடுக்கக்கூடாது- மந்திரி எஸ்.டி.சோமசேகர் உத்தரவு


சோமநாதபுரா சென்னகேசவா கோவில் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இடையூறு கொடுக்கக்கூடாது- மந்திரி எஸ்.டி.சோமசேகர் உத்தரவு
x

யுனஸ்கோ சான்றிதழ் பெற நிலத்தை கையகப்படுத்தி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள சோமநாதபுரா சென்னகேசவா கோவில் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இடையூறு கொடுக்க கூடாது என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் உத்தரவிட்டுள்ளார்.

மைசூரு:

ரூ.3.40 கோடி வளர்ச்சி பணி

மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மந்திரி எஸ்.டி.சோமசேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பி.ஆர் பூர்ணிமா, சோமநாதபுரா சென்னகேசவா கோவிலுக்கு யுனஸ்கோ சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதனால் யுனஸ்கோவை சேர்ந்த அதிகாரிகள் நேரில் பார்வையிடுவதற்காக ஆகஸ்ட் மாதம் வர உள்ளனர். கோவில் முழுவதையும் பார்வையிடும் அவர்கள் ரூ.3.40 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதனால் கோவிலை சுற்றியுள்ள ஏராளமான நிலங்களை கையகப்படுத்த வேண்டியது உள்ளது என்றார். இதை கேட்ட மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறியதாவது:-

இடையூறு கொடுக்க கூடாது

சோமநாதபுராவில் எந்த இடம் யாருக்கும் சொந்தம் என்பதை முதலில் ஆய்வு செய்யவேண்டும். சென்னகேசவா கோவிலுக்கு யுனஸ்கோ சான்றிதழ் கிடைக்கவேண்டும் என்பதற்காக விதிமுறையை மீறி செயல்படகூடாது. கோவிலை ஒட்டி 100 மீட்டர் துரத்தில் உள்ள இடங்கள் கையகப்படுத்தப்படும் என்றால், பொதுமக்கள் வீடுகள் பாதிக்கப்படும். எனவே, இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story