மைசூரு தசரா பண்டிகையையொட்டி மல்யுத்த போட்டி வருகிற 15-ந்தேதி தொடக்கம்


மைசூரு தசரா பண்டிகையையொட்டி  மல்யுத்த போட்டி வருகிற 15-ந்தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு தசரா பண்டிகையையொட்டி மல்யுத்த போட்டி வருகிற 15-ந்தேதி முதல் தொடங்குகிறது என மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

மைசூரு

தசரா விழா

மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த தசரா விழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். இதனை காண வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வருவார்கள்.

மேலும் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தால் மைசூரு நகரே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு தசரா விழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

தசரா விழா தொடங்குவதற்கு சில நாட்களே இருப்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அவர்கள் அரண்மனை வளாகம் முன்பு குவிவார்கள்.இதனால் மைசூரு அரண்மனை சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. தசரா விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மல்யுத்த போட்டி

இந்தநிலையில், வருகிற 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 7 நாட்கள் மல்யுத்த போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தினி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், மல்யுத்த போட்டிக்காக ஏற்கனவே வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் 8 மாவட்டங்களில் இருந்து 25 ஜோடி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

மல்யுத்த போட்டி வருகிற 15-ந் தேதி முதல் 21-ந் ே்ததி வரை நடக்கிறது. இந்த போட்டி 3 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. நாட குஸ்தி போட்டியில் 35 வயதிற்குள் உள்ளவர்கள், பாயிண்ட் குஸ்தி போட்டியில் 40 வயதிற்குள் உள்ளவர்கள், பஞ்ச குஸ்தி போட்டியில் 45 வயதிற்குள் உள்ளவர்கள் பங்கேற்க முடியும், என்றார். முன்னதாக மல்யுத்த நிகழ்ச்சிக்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டது.


Next Story