கர்நாடகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்தது-19 குழந்தைகள் இறந்ததாக ஆய்வில் தகவல்


கர்நாடகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்தது-19 குழந்தைகள் இறந்ததாக ஆய்வில் தகவல்
x

கா்நாடகத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. 19 குழந்தைகள் இறந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெங்களூரு:

போலியோ

உலகம் முழுவதும் கடந்த காலங்களில் குழந்தைகள் இறப்பு விகிதம் (பிறந்து 1 ஓராண்டுக்குள் இறக்கும் எண்ணிக்கை) அதிகமாக இருந்தது. போலியோ, அம்மை நோய்கள், ரத்த சோகை, சத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் குழந்தைகள் அதிகளவில் இறந்தன. மத்திய, மாநில அரசுகள் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க, நோய் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து போலியோ போன்ற நோய்களுக்கு தடுப்பூசி என்ற ஒன்றை கண்டுபிடித்து செலுத்தினர்.

வேண்டிய உதவிகள்

அதன்பின்னர் குழந்தைகள் இறப்பு குறைய தொடங்கியது. எனினும், அது முழுமையாக குறையவில்லை. அதற்காக தீவிர முயற்சிகளில் வல்லுனர்கள் மற்றும் டாக்டர் பெருமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அரசும் அதற்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் கர்நாகடத்தில் மட்டும் 19 குழந்தைகள் இறந்துள்ளது தெரியவந்தது.

அந்த ஆய்வு குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் நகரங்களில் சராசரியாக 16 குழந்தைகளும், கிராமப்புறங்களில் சராசரியாக 21 குழந்தைகளின் இறப்பு பதிவாகி உள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் மராட்டிய

மாநிலத்தில் அதிகபட்சமாக 43 குழந்தைகள் இறந்துள்ளன. குறைந்தபட்சமாக மிசோரமில் 3 குழந்தைகள் இறந்தன. இந்த பட்டியலில் கர்நாடக மாநிலத்தில் 19 குழந்தைகள் இறந்துள்ளன.

நாட்டின் விகிதம்

கடந்த 2011-ம் ஆண்டில் கர்நாடகத்தில் மட்டும் 35 குழந்தைகள் இறந்து இருந்தன. அது 2016-ம் ஆண்டில் 24-ஆக குறைந்தது. 2017-ம் ஆண்டு சற்று அதிகரித்து 25 ஆனது. அதையடுத்து ஆண்டுக்கு 2 என குறைந்து கொண்டே வந்தது. இறுதியாக 2020-ம் ஆண்டில் 19 குழந்தைகளாக ஆனது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்தே வருகிறது. அதாவது குழந்தை இறப்பு விகிதம் 36 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் 31 சதவீதமாகவும், நகரங்களில் 19 ஆகவும் குறைந்துள்ளது. இவ்வாறு அந்த குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

சுகாதார துறை இலக்கு

இதுகுறித்து கர்நாடக சுகாதார கமிஷனர் ரன்தீப் கூறுகையில், கர்நாடகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதில் கர்நாடகம் மைல்கல்லை எட்டியுள்ளது. கிராமப்புறங்களில் குழந்தைகள் இறப்பு, இயற்கையானதாக இருந்தது. நோய் பாதிப்பால் இறந்த குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் உயிரிழந்திருக்காது.

கர்நாடகத்தில் இறப்பு விகிதத்தை ஒற்றை இலக்கமாக மாற்றுவதே, சுகாதார துறையின் அடுத்த இலக்கு. இனிவரும் காலங்களில் குழந்தைகள் இறப்பதை தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளபடும் என்றார்.


Next Story