பெங்களூருவில் தொடர் மழை எதிரொலி டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது-ஒரே வாரத்தில் 264 பேர் பாதிப்பு


பெங்களூருவில் தொடர் மழை எதிரொலி  டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது-ஒரே வாரத்தில் 264 பேர் பாதிப்பு
x

பெங்களூருவில் தொடர் மழை எதிரொலியாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. கடந்த ஒரு வாரத்தில் 264 பேருக்கு தொற்று பாதிப்பு.

பெங்களூரு:

பெங்களூருவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 264 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக பெங்களூருவில் இதுவரை 1,058 போ் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக 39 ஆயிரத்து 696 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 1,058 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

பெங்களூருவுக்கு அடுத்தபடியாக மைசூருவில் 536 பேரும், உடுப்பியில் 444 பேரும், தட்சிண கன்னடா மற்றும் சித்ரதுர்காவில் தலா 243 பேரும், சிவமொக்காவில் 220 பேரும், சிக்பள்ளாப்புராவில் 204 பேரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 189 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் உயிர் இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால், டெங்கு காய்ச்சல் போன்று சிக்குன் குனியாவுக்கும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநிலத்தில் 28 மாவட்டங்களில் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.


Next Story