கோலார் தங்கவயலில், வாரந்தோறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்: ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. தகவல்


கோலார் தங்கவயலில், வாரந்தோறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்:  ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. தகவல்
x

கோலார் தங்கவயலில், வாரந்தோறும் ஒவ்வொரு வார்டாக மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

கோலார் தங்கவயல்:

ஆலோசனை கூட்டம்

கோலார் தங்கவயல் நகரசபை அலுவலகத்தில் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர், நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கோலார் நகரசபைக்கு உட்பட்ட பகுதியில் 35 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள குறைகளை வார்டுகளை சேர்ந்த மக்கள் நாள்தோறும் நகரசபைக்கு வந்து கூறி வருகின்றனர். பொதுமக்கள் வருவதை தவிர்த்து பொதுமக்களிடமே சென்று குறைகளை கேட்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாரந்தோறும் ஒவ்வொரு வார்டில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.

பயனடைய வேண்டும்

இதில் பொதுமக்களிடம் இருந்து குறைகளை கேட்டடறிந்து அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி 6-ந்தேதி(நாளை) கோலார் தங்கவயலில் உள்ள தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதியில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதில் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story