மைசூருவில் கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


மைசூருவில் கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x

மைசூருவில் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மைசூரு:

மைசூரு டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் பரவலாக மழை பெய்தது. இதேபோல் 2-வது நாளாக நேற்றும் மைசூருவில் கனமழை பெய்தது. காலை 4 மணி வரை வெயில் இருந்தது. அதன்பிறகு மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை, இரவு வரை பெய்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மாலை நேரத்தில் மழை பெய்ததால் தசரா யானைகளின் நடைபயிற்சிக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் திடீரென பெய்த மழையால் சொந்த வேலையாக வெளியே வந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனஓட்டிகள் போக்குவரத்துக்கு சிரமம் அடைந்தனர்.


Next Story