காட்டுயானை தாக்கி விவசாயி சாவு-கிராம மக்கள் பீதி


காட்டுயானை தாக்கி விவசாயி சாவு-கிராம மக்கள் பீதி
x

காட்டுயானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்பட்டுள்ளது.

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா அரகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் தேவங்க்(வயது 52). விவசாயியான இவர் நேற்று காலையில் அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்திற்கு சென்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டுயானை அங்கு வந்தது. அந்த காட்டுயானையை பார்த்த ஆனந்த் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த காட்டுயானை அவரை விடாமல் விரட்டிச்சென்று தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. மேலும் காலால் மிதித்தது. அதுமட்டுமில்லாமல் அவரை தும்பிக்கையால் பிடித்து தரதரவென சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று காலால் மிதித்தது.

இந்த கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். காட்டுயானையின் அட்டகாசத்தால் அப்பகுதி கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுபற்றி அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் அந்த காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


Next Story