விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவருக்கு தர்ம-அடி
மண்டியாவில் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம-அடி கொடுத்துள்ளனர்.
மண்டியா:
மண்டியா மாவட்டம் எலியூர் சர்க்கிள் பகுதியில் நேற்று முன்தினம் கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், காரை முந்திரி சென்றது. இந்த சந்தர்ப்பத்தில் அரசு பஸ் தறிகெட்டு ஓடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், டிரைவரை சொரூப்பை பிடித்து அதிவேகமாக ஓட்டியதாக தாக்கினர். மேலும் பஸ்சின் மீது கற்களை கொண்டு வீசினர். இதில் பயணிகளுக்கு எந்த காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து மண்டியா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story