விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய நிலங்களுக்கு 90 நாட்களுக்குள் இழப்பீடு; மந்திரி முருகேஷ் நிரானி தகவல்


விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய நிலங்களுக்கு 90 நாட்களுக்குள் இழப்பீடு; மந்திரி முருகேஷ் நிரானி தகவல்
x

விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய நிலங்களுக்கு 90 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பேசியதாவது:-

கர்நாடகத்தில் தொழில் தொடங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக உள்ளது. அதற்காக சூழலை மாநில அரசு ஏற்படுத்தி கொடுக்கும். நவம்பர் மாத இறுதிக்கு 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கண்டறிந்து அவற்றை கையகப்படுத்தவும், விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு 90 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனே்.

மாவட்ட, தாலுகா அலுவலகங்களில் நிலங்கள் கையகப்படுத்துவது தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆகஸ்டு 15-ந்் தேதிக்கு பின்னர் அனைத்து ஆவணங்களும் ஆன்லைனில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். காகித ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story