அரிசிகெரேவில் கோவில் குளத்தில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு


அரிசிகெரேவில் கோவில் குளத்தில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு
x

கோவில் குளத்தில் குளிக்க சென்ற வாலிபர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஹாசன்:

ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா சித்தய்யா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தன்(வயது 20), ரக்‌ஷித் (20). இவர்கள் 2 பேரும் தங்கள் நண்பர்கள் சிலருடன் சிக்கூரு பகுதியில் உள்ள கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றிருந்தனர். சந்தனும், ரக்‌சித்தும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது.அப்போது எதிர்பாராதவிதமாக 2 பேரும் குளத்தில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களை, நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் குளத்தில் மூழ்கி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அரிசிகெரே புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் குளத்தில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சிவலிங்கேகவுடா எம்.எல்.ஏ. நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் 2 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து அரிசிகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story