அமலாக்கத்துறை அதிகாரிக்கு எதிராக ஜாபர் சாதிக்கின் கூட்டாளி வழக்கு
அமலாக்கத்துறை அதிகாரி சுனில் சங்கர் யாதவ் விசாரணையின் போது அடித்து துன்புறுத்தியதாக ஜாபர் சாதிக் கூட்டாளி வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதுடெல்லி
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் திகார் சிறையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இதில் கடந்த 8-ந் தேதி வாக்குமூல பதிவின்போது அமலாக்கத்துறை அதிகாரி சுனில் சங்கர் யாதவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் டெல்லி பட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதானந்தம் சார்பில் வக்கீல் பிரபாகரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதீர் குமார் சிரோஹி, இது தொடர்பாக பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கும், திகார் சிறை அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்
Related Tags :
Next Story