கர்ஜி கிராமத்தில் பஞ்சாயத்து தலைவியாக இளம்பெண் தேர்வு தாய் துணைத்தலைவி ஆனார்


கர்ஜி கிராமத்தில் பஞ்சாயத்து தலைவியாக இளம்பெண் தேர்வு தாய் துணைத்தலைவி ஆனார்
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்ஜி கிராமத்தில் பஞ்சாயத்து தலைவியாக இளம்பெண் தேர்வு செய்யப்ட்டார். பஞ்சாயத்து தலைவி ஆனார்

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவில் கர்ஜி கிராம பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தில் 7 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி கர்ஜி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. அதில் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ள சினேகா உள்பட 2 பேர் போட்டியிட்டனர்.

இதேபோல் துணை தலைவர் பதவிக்கு சினேகாவின் தாயார் நேத்ராவதி உள்பட 2 பேர் போட்டியிட்டனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கர்ஜி கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு கடூர் தாசில்தார் முன்னிலையில் தேர்தல் நடந்தது. அப்போது வார்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அதில் சினேகாவுக்கு 4 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து அவர் பஞ்சாயத்து தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேப்போல் துணைத்தலைவியாக நேத்ராவதியும் தேர்ந்தெடுக்கபட்டார். அவர்கள் 2 பேருக்கும் தாசில்தார் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


Next Story