கடலோர மாவட்டங்களுக்கு "மஞ்சள் அலர்ட்" ; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் ; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x

கடலோர மாவட்டங்களுக்கு வருகிற 18-ந் தேதி வரை "மஞ்சள் அலர்ட்" என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மங்களூரு;


கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலைநகர் பெங்களூரு உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பலபகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த மழைக்கு 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை விரைவு படுத்த கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் வருகிற 18-ந் தேதி வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தரகன்னடாவில் வருகிற 18-ந் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் பலபகுதிகளில் கனமழைக்கும், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story