காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்காது; யத்னால் எம்.எல்.ஏ. பேட்டி


காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்காது; யத்னால் எம்.எல்.ஏ. பேட்டி
x

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மோதல் காரணமாக காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்காது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. யத்னால் தெரிவித்துள்ளார்.

பெலகாவி:

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மோதல் காரணமாக காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்காது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. யத்னால் தெரிவித்துள்ளார்.

பெலகாவியில் நேற்று பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த யத்னால் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

5 ஆண்டுகள் நீடிக்காது

மாநிலத்தில் தற்போது சித்தராமையா, டி.கே.சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் மோதிக் கொண்டனர். முதல்-மந்திரி பதவியை சித்தராமையா விட்டு கொடுக்க மாட்டார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையிலான மோதலால் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்காது.நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பெரிய பிளவு ஏற்படும். அதன்பிறகு, ஆட்சி கவிழ்ந்துவிடும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட ஆட்சி கவிழலாம். சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் செருப்பால் அடித்து கொள்வார்கள்.

மோதிக்கொள்ள வேண்டாம்

எடியூரப்பா வீட்டுக்கும், பசவராஜ் பொம்மை வீட்டுக்கும் டி.கே.சிவக்குமார் சென்றுள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு நான் சென்றதில்லை, செல்லவும் மாட்டேன் என்று சித்தராமையா கூறி இருக்கிறார். அப்படி இருக்க டி.கே.சிவக்குமார் எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டுக்கு சென்றது கேள்விக்குறியாக உள்ளது.

3 மாதத்தில் காங்கிரசின் வாக்குறுதிகள் வண்ணம் மாறி போகும். மாநில அரசின் நிதி நிலைமை பற்றியும் பா.ஜனதாவுக்கு தெரியும். பா.ஜனதாவுக்குள் யாரும் மோதிக் கொள்ள வேண்டாம். எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதை பா.ஜனதா தலைமை முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story