பிரியங்கா காந்தியை சந்தித்த சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா..!
பலரும் பாஜக அரசையும் மல்யுத்த சம்மேளத்தையும் விமர்சித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் நேற்று மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து, இன்று மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக முடிவெடுத்துள்ளார்.
ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் பெற்ற வீராங்கனை கண்ணீருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தது அனைத்து தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால், பலரும் பாஜக அரசையும் மல்யுத்த சம்மேளத்தையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் சாக்ஷி மாலிக்கும் பஜ்ரங் பூனியாவும் இணைந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியைச்சந்தித்துள்ளனர். டெல்லியில் உள்ள மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கின் இல்லத்தில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "நான் ஒரு பெண்ணாக அவருக்கு ஆறுதல் கூற வந்தேன் என்றார்.