நான் நிரபராதி, விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்-மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்


நான் நிரபராதி, விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்-மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்
x

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது பெண் மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார்களைத் தொடர்ந்து டெல்லி போலீசார் நேற்று இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.

புதுடெல்லி

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது இளம் மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களை காங்கிரஸ் பொதுசெயலர் பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் பிரியங்கா காந்தி வதேரா கூறியதாவது:-

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது பெண் மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார்களைத் தொடர்ந்து டெல்லி போலீசார் நேற்று இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.

பிரதமரிடம் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, ஏனென்றால் இந்த மல்யுத்த வீரர்களைப் பற்றி அவர் கவலைப்படுகிறார் என்றால், அவர் ஏன் அவர்களுடன் பேசவில்லை அல்லது அவர்களை சந்திக்கவில்லை.

தேசம் அவர்களுடன் நிற்கிறது, இதுபோன்ற பிரச்சினைக்கு எதிராக இந்த மல்யுத்த வீரர்கள் குரல் எழுப்பியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என கூறினார்.

இந்த் நிலையில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் நிரபராதி, விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். விசாரணை அமைப்புடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நான் மதிக்கிறேன்

ராஜினாமா செய்வது பெரிய விஷயம் இல்லை ஆனால் நான் குற்றவாளி அல்ல. நான் ராஜினாமா செய்தால், அவர்களின் (மல்யுத்த வீரர்களின்) குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக்கொண்டேன் என்று அர்த்தம். எனது பதவிக்காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 3 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது, இன்னும் 45 நாட்களில் தேர்தல் நடத்தப்படும், தேர்தலுக்குப் பிறகு எனது பதவிக்காலம் முடிவடையும் என கூறினார்.


Next Story