உலகின் மிக உயரமான கிருஷ்ணர் சிலை துவாரகாவில் அமைகிறது


உலகின் மிக உயரமான கிருஷ்ணர் சிலை துவாரகாவில் அமைகிறது
x

கோப்புப்படம்

உலகின் மிக உயரமான கிருஷ்ணர் சிலை துவாரகா நகரில் அமைக்கப்படும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

அகமதாபாத்,

'தேவபூமி துவாரகா காரிடார்' திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகின் மிக உயரமான கிருஷ்ணர் சிலை துவாரகா நகரில் அமைக்கப்படும் என்று குஜராத் அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்ட பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காந்திநகரில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, குஜராத் மாநில அரசின் செய்தித் தொடர்பாளரும், சுகாதார மந்திரியுமான ருஷிகேஷ் படேல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த பகுதியை மேற்கு இந்தியாவின் மிகப்பெரிய மத மையமாக மாற்றுவதற்கு 'தேவபூமி துவாரகா காரிடாரை' உருவாக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக படேல் கூறினார். மேலும் இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, தொலைந்து போன துவாரகா நகரின் எச்சங்களை மக்கள் காணும் வகையில் ஒரு காட்சிக்கூடத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story