லோகோ பைலட்டுகளின் பணி நேரம் கண்காணிக்கப்படுகிறது: ரெயில்வே மந்திரி தகவல்


லோகோ பைலட்டுகளின் பணி நேரம் கண்காணிக்கப்படுகிறது: ரெயில்வே மந்திரி தகவல்
x

லோகோ பைலட்டுகளுக்கு பயணங்களுக்கு பிறகு ஓய்வு கொடுக்கப்படுகிறது என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

புதுடெல்லி,

லோகோ பைலட்டுகள் குறித்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளபதிவில் கூறியதாவது:-

லோகோ பைலட்டுகள் ரெயில்வே குடும்பத்தின் முக்கியமான உறுப்பினர்கள். லோகோ பைலட்டுகளின் பணி நேரம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. அவசர காலங்களில் மட்டுமே லோகோ பைலட்டுகளின் பணி நேரம் சற்று அதிகமாக இருக்கும்.

லோகோ பைலட்டுகளுக்கு பயணங்களுக்கு பிறகு ஓய்வு கொடுக்கப்படுகிறது. சராசரியாக ஜூன் மாதத்தில் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே பணி நேரம் உள்ளது. 2014க்கு பிறகு ரெயில்களில் ரெயில் ஓட்டுநர் அறை உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஆள் சேர்ப்புப் பணிகள் முடிந்து 34,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

லோகோ பைலட்டுகளின் பணி நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதை விமர்சிக்கின்றனர். போலிச் செய்திகளால் ரெயில்வே குடும்பத்தை சீரழிக்கும் முயற்சி தோல்வியடையும். லோகோ பைலட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர். நாட்டிற்கு சேவை செய்வதில் அனைத்து ரெயில் நிர்வாகமும் ஒன்றுபட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story