மும்பையில் ஏக்நாத் ஷிண்டே- உத்தவ் தாக்கரே ஆதரவாளர்களுக்கு இடையே கைகலப்பு
மும்பையில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு இன்று அதிகாலை இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் என இரண்டு பிரிவாக கட்சி உடைந்துள்ளது. இரு தரப்புமே தாங்கள்தான் உண்மையான சிவசேனா எனக்கூறி வருகின்றன. இந்த விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளது. அங்கு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இதனிடையே, மும்பையில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு இன்று அதிகாலை இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த மோதல் கைகலப்பாக மாறியுள்ளது. அதிகாலை 12.30 மணிக்கு இரு பிரிவினரும் ஒருவொருக்கொருவர் பலமாக தாக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த மோதல் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் கைது செய்தனர். பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.