ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
சாகர் தாலுகாவில் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவை சேர்ந்தவர் சங்கர். இவர் கர்நாடக மின் உற்பத்தி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (வயது 43). இந்த நிலையில் சங்கர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று இருந்தார்.
அப்போது காயத்ரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற காயத்ரி அந்த பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்திற்கு சென்றார். அங்கு நின்ற அவர் திடீரென ஓடும் ஆற்றில் குதித்தார்.
இதில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து கார்காலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும், ஆற்றில் குதித்த பெண்ணின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை ஏதும் காரணமாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.