நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கண்டு காங்கிரஸ் அஞ்சுவது ஏன்? மத்திய மந்திரி கேள்வி


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கண்டு காங்கிரஸ் அஞ்சுவது ஏன்?  மத்திய மந்திரி கேள்வி
x

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் கண்டு காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு பயம்? என மத்திய மந்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18 முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 17-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரஹலாத் ஜோஷி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ''நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலை வெளியிடுவதற்கு மட்டுமே விதி உள்ளது. நாடாளுமன்றம் கூட்டப்படும்போது அதற்கான திட்டம் வெளியிடப்படுவதில்லை.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூடுவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக மட்டுமே அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலோ அல்லது அனைத்து கட்சி கூட்டத்திலோ பகிரப்படும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் இதேதான் நடந்தது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரைக் கண்டு காங்கிரசுக்கு ஏன் இவ்வளவு பயம்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story