நடப்பு ஆண்டு ஜூலையில் மொத்த விற்பனை விலை பணவீக்க குறியீடு 13.93% ஆக குறைவு


நடப்பு ஆண்டு ஜூலையில் மொத்த விற்பனை விலை பணவீக்க குறியீடு 13.93% ஆக குறைவு
x

நடப்பு ஆண்டு ஜூலைக்கான மொத்த விற்பனை விலை பணவீக்க குறியீட்டு அளவு கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 13.93% ஆக குறைந்துள்ளது.

புதுடெல்லி,



நடப்பு ஆண்டு ஜூலைக்கான மொத்த விற்பனை விலை பணவீக்க குறியீட்டு அளவை மத்திய வர்த்தக மற்றம் தொழில் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது. இதன்படி, கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், மொத்த விற்பனை விலை பணவீக்கம் அடிப்படையிலான வருடாந்திர பணவீக்க விகிதம் 15.18% என்ற அளவில் இருந்து ஜூலை மாதத்தில் 13.93% ஆக குறைந்துள்ளது.

நடப்பு 2022-ம் ஆண்டு ஜூலையில், எண்ணெய், உணவு பொருட்கள், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு, உலோகங்கள், மின்சாரம், ரசாயனம் மற்றும் ரசாயன பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்து உள்ளது.

இதேபோன்று உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை அடக்கிய உணவு மொத்த விற்பனை விலை பணவீக்க குறியீடானது கடந்த ஜூனுடன் ஒப்பிடும்போது 12.41%-ல் இருந்து 9.41% என்ற அளவில் குறைந்து உள்ளது என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story