தமிழக கேடரை சேர்ந்த சஞ்செய் அரோரா டெல்லி காவல் ஆணையராக நியமனம்
டெல்லி காவல்துறை ஆணையராக தமிழக ஐ.பி.எஸ் கேடரான சஞ்செய் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல் துறையின் புதிய ஆணையராக சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி போலீஸ் கமிஷனராக இருக்கும் ராகேஷ் அஸ்தானா பதவிக்காலம் இன்றுடன்முடிவடைகிறது. இதனையடுத்து புதிய கமிஷனராக சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாளை கமிஷனராக பதவியேற்க உள்ள அரோரா மறுஉத்தரவு வரும் வரை அந்த பதவியில் இருப்பார்.
1989-ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான சஞ்சய் அரோரா, இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை இயக்குனராக உள்ளார். தமிழகத்தில் பணிபுரிந்த போது, பல்வேறு மாவட்ட எஸ்.பி., மற்றும் கோவை போலீஸ் கமிஷனராகவும் பதவி வகித்துள்ளார். ஜனாதிபதி பதக்கம் உள்ளிட்டபல விருதுகளையும் வென்றுள்ளார்.
Related Tags :
Next Story