பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வழக்கு விசாரணையில் இருந்து விலகல்


பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வழக்கு விசாரணையில் இருந்து விலகல்
x

பெண் பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பெலா திரிவேதி வழக்கு விசாரணையில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட மதவாத வன்முறைகளில், பில்கிஸ் பானு விவகாரம் முக்கியமானது. கர்ப்பிணியாக இருந்த இளம்பென் பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய உள்ளூர் கும்பல், சிறு குழந்தையான அவரின் மகள் உட்பட குடும்பத்தினரையும் கொடூரமான முறையில் படுகொலை செய்தது.

காலத்தால் அழிக்கமுடியாத வடுவாகிப் போன அந்த சம்பவத்தில், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர்களை முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி அவர்களை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனை எதிர்த்து, பில்கிஸ் பானு கடந்த மாதம் 30ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்.

அவரின் மனுக்கள் மீது, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பெலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு வரும் 13ஆம் தேதி விசாரணையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் 11 பேரை குஜராத் அரசு முன் கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பெலா திரிவேதி வழக்கு விசாரணையில் இருந்து விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story