"நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல்?" - சு.வெங்கடேசன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்


நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல்? - சு.வெங்கடேசன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்
x

நீட் விலக்கு மசோதா குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

புதுடெல்லி,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக கவர்னர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சத்தின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்கள் ஏற்கனவே தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார. இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிக்கப்படும் என்பது குறித்து காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story