வாட்ஸ்அப்பின் இந்திய பிரிவு தலைவர் அபிஜித் போஸ் திடீர் ராஜினாமா!
வாட்ஸ்அப்பின் இந்திய பிரிவு தலைவர் அபிஜித் போஸ் மற்றும் மெட்டா பொது கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் ராஜினாமா செய்துள்ளனர்.
புதுடெல்லி,
வாட்ஸ்அப்பின் இந்திய தலைவர் அபிஜித் போஸ் மற்றும் இந்தியாவில் உள்ள மெட்டா பிளாட்பார்ம்ஸ் பொது கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் இன்று தங்கள் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். நீண்டகாலமாக இந்த முடிவு எடுப்பது குறித்து ஆலோசனையில் இருந்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், வாட்ஸ்அப்பின் இந்திய பிரிவு 'பொது கொள்கை இயக்குனராக' த்ர்போது பணியாற்றி வரும் சிவநாத் துக்ரா, இனிமேல் மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் 'பொது கொள்கை இயக்குனர்' ஆக செயல்படுவார் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் அஜித் மோகன் ராஜினாமா செய்தார். பிரபல சமூக வலைதளமான வாட்ஸ்அப் நிறுவனம், இந்தியாவில் 487 மில்லியன்(48.70 கோடி) பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.