டெல்லியில் வானிலை பாதிப்பு; விமான போக்குவரத்து பாதிப்பு
டெல்லியில் பெய்த மழை மற்றும் பலத்த காற்று வீச்சு ஆகியவற்றால் ஏற்பட்ட வானிலை பாதிப்புகளால் டெல்லி விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் கோடையை முன்னிட்டு தினமும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. நாள்தோறும் கடுமையான வெப்பத்தினால் பொதுமக்களின் அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று அதிகாலை விஜய் சவுக் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசாக சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.
நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றும் வீசியது. பல இடங்களில் மழைநீர் சாலைகளில் ஓடிய நிலையில், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சற்று மெதுவாக சென்றன.
டெல்லியில் பெய்த மழை மற்றும் பலத்த காற்று வீச்சு ஆகியவற்றால் ஏற்பட்ட வானிலை பாதிப்புகளால் டெல்லி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும், அவர்கள் பயணம் செய்ய கூடிய தொடர்புடைய விமான நிறுவனங்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு, விமானங்களின் வருகை பற்றிய தகவல்களை பெற்று கொள்ளும்படி டெல்லி விமான நிலையம் கேட்டு கொண்டுள்ளது.