பெண் டாக்டர் கொலை: குற்றவாளியை தூக்கிலிடுங்கள் - மம்தா பானர்ஜி ஆவேசம்


பெண் டாக்டர் கொலை: குற்றவாளியை தூக்கிலிடுங்கள் - மம்தா பானர்ஜி ஆவேசம்
x

கொல்கத்தாவில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

கொல்கத்தா,

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய சஞ்சய் ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக்கூறிய கொல்கத்தா ஐகோர்ட், மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, கொல்கத்தா பெண் டாக்டர் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கொல்கத்தாவில் பாலியல் குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பயிற்சி டாக்டர் கொலை வழக்கில் நடவடிக்கைகள் எடுத்தாலும் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. என் மீது குற்றம்சாட்டுங்கள், மேற்கு வங்காளத்தை குற்றம்சாட்ட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுக்கு கட்டுப்பட்டு, சிபிஐக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவோம். இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நோயாளிகள் பாதிக்கப்படுவதால் டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Next Story