2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு - பிரதமர் மோடி வரவேற்பு


2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு - பிரதமர் மோடி வரவேற்பு
x

கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் இணைத்ததற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை டி20 வடிவமாக சேர்ப்பதற்கு ஐசிசி கோரிக்கை வைத்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட ஒலிம்பிக் கமிட்டி இன்று மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு முன்பாக அந்த கோரிக்கையை வைத்தது. அதில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு உறுப்பினர்களின் போதிய வாக்குகள் கிடைத்துள்ளதாக தற்போது ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் இணைத்ததற்கு வரவேற்பு தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறியுள்ளதாவது:-

லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கில் பேஸ்பால், லேக்க்ராஸ், கிரிக்கெட், ஸ்குவாஸ், பிளாக் புட்பால் ஆகிய போட்டிகள் இடம்பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த செய்தி. கிரிக்கெட்டை விரும்பும் தேசமாக, கிரிக்கெட்டை இணைத்துள்ளதை நாங்கள் சிறப்பாக வரவேற்கிறோம். இந்த அற்புதமான விளையாட்டின் உலகளாவிய பிரபலம் அதிகரித்து வருவதை இது பிரதிபலிக்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story