கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு...!
கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
Live Updates
- 10 May 2023 11:22 AM IST
எங்களைப் பார்த்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - இன்போசிஸ் சுதா மூர்த்தி
எங்களைப் போன்ற வயதானவர்கள் காலை 6 மணிக்கே வந்து வாக்குகளை செலுத்தியுள்ளோம் என்றும் எங்களைப் பார்த்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என இன்போசிஸ் சுதா மூர்த்தி கூறியுள்ளார்.
"இளைஞர்களுடன் சேர்ந்து வாக்களிப்பது ஏன் முக்கியம் என்று அவர்களுக்கு அறிவுரை கூறுவது பெரியவர்களின் பொறுப்பு. அதைத்தான் என் பெற்றோர் செய்தார்கள்" என்கிறார் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி.
- 10 May 2023 10:53 AM IST
காங்கிரஸ் 150 இடங்கள் வரை கைப்பற்றும் - கர்நாடாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா
"உழைக்கும் கட்சிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டின் எதிர்காலமும் இந்தத் தேர்தலில் சம்பந்தப்பட்டிருக்கிறது" என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரசுக்கு 130 இடங்கள் கிடைக்கும் என்றும், 150 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் நான் தொடர்ந்து கூறிருகிறேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.
- 10 May 2023 9:48 AM IST
கர்நாடக சட்டசபை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 8.26% வாக்குப்பதிவு
கர்நாட சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.26% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. கிராமப்புறங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருவதாகவும், நகர்ப்புறங்களில் மந்தமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 10 May 2023 9:28 AM IST
வரிசையில் நின்று வாக்களித்தார் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை..!
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதல்-மந்திரியும் ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான பசவராஜ் பொம்மை சிக்காவியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.தேர்தலில் வாக்களிக்கப்பதற்கும் முன் காவேரியில் உள்ள காயத்ரி கோவிலில் பசவராஜ் பொம்மை வழிபாடு செய்தார்.
- 10 May 2023 8:51 AM IST
மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த எடியூரப்பா...!
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஷிஜாரிபுராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். ரநாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா வாக்களித்த பின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
"எல்லா மக்களையும் கூடிய விரைவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நான் 100% உறுதியாக நம்புகிறேன். 75-80% க்கும் அதிகமானோர் பாஜகவை ஆதரிப்பார்கள். நாங்கள் 130-135 இடங்களை வெல்வோம்" என்றார்.
- 10 May 2023 8:50 AM IST
உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள் - நடிகர் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டர் பதிவில்,
காலை வணக்கம் கர்நாடகா...நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக...40% ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்..உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள் என பதிவிட்டுள்ளார்.
- 10 May 2023 8:49 AM IST
ஜனநாயக கடமையை ஆற்றிய இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி...!
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பெங்களூரில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
- 10 May 2023 8:46 AM IST
குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்...!
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். பெங்களூரு, ஜெயநகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார்.
பெங்களூருவில் வாக்களித்த பிறகு மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, பணவீக்கம் குறித்து, பொதுமக்கள் மீது சுமை இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் பொதுமக்களுடன் இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு (அதைப் பற்றி பேச) உரிமை இல்லை என்றார்.