வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படவில்லை; மந்திரி முனிரத்னா சொல்கிறார்


வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படவில்லை; மந்திரி முனிரத்னா சொல்கிறார்
x

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதியில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படவில்லை என்று மந்திரி முனிரத்னா கூறினார்.

பெங்களூரு:

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதியில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும், புதிதாக 1.30 லட்சம் பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக காலி வீடுகள், காலி நிலங்களில் வசிப்பதாக கூறி வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு முறைகேடு செய்திருப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி.யான டி.கே.சுரேஷ் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுகுறித்து பா.ஜனதாவை சேர்ந்த மந்திரி முனிரத்னா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.ஆர்.நகர் தொகுதியில் வாக்காளர்கள் பட்யடிலில் முறைகேடு நடந்திருப்பதாக டி.கே.சுரேஷ் குற்றச்சாட்டு கூறி வருவதுடன், தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளார். ஆர்.ஆர்.நகர் தொகுதியில் எந்தவொரு வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்படவில்லை. திட்டமிட்டு வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறுவதிலும் உண்மை இல்லை. வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, முறைகேடு செய்யும் அளவுக்கு கீழ் மட்டமாக நான் இறங்க வேண்டிய நிலையும் இல்லை. தேவைப்பட்டால் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் வாக்காளர்களின் பட்டியலை பரிசீலனை செய்து கொள்ளட்டும். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் தான் பேட்டியிடுவேன். எக்காரணத்தை கொண்டும் காங்கிரசுக்கு செல்ல மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story