மதிய உணவு சாப்பிட்ட 28 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்


மதிய உணவு சாப்பிட்ட 28 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
x

ஒலல்கெரே உண்டு உறைவிடப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 28 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிக்கமகளூரு;


சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா அனுமந்ததேவரகனிவே கிராமத்தில் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 130 மாணவிகள் படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மதியம் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட மாணவிகளில் 28 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைப்பாா்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உதவியுடன் மாணவிகளை ஒலல்கெரே அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், கலப்பட உணவு காரணமாக மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற ஒலல்கெரே தொகுதி எம்.எல்.ஏ. சந்திரப்பா மாணவிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.


Next Story