அரியானாவில் இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்: 40 பேர் காயம் என தகவல்


அரியானாவில் இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்: 40 பேர் காயம் என தகவல்
x
தினத்தந்தி 31 July 2023 7:05 PM IST (Updated: 31 July 2023 8:20 PM IST)
t-max-icont-min-icon

அரியானா மாநிலம் மேவாட் பகுதியில் இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல் வெடித்தது.

கவுகாத்தி,

அரியானா மாநிலம் குர்கான் அருகே, நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மஹாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகே உள்ள நதியில் புனித நீர் எடுத்து வந்தனர்.

அப்போது குர்கான்- அல்வார் தேசிய நெடுஞ்சாலை வழியாக யாத்திரை வந்த போது ஒரு அமைப்பினர் தகராறு செய்தாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட கைகலப்பு கலவரமாக மாறியது, இதில் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 40 பேர் படுகாயமடைந்தனர்.

அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. தகவலறிந்த போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். படையினர் வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். மேவாட் பகுதியில் நடந்த ஒரு பிரிவினரின் பேரணியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story