நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்; முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்; முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி பேட்டி
x

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என்று முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி கூறினார்.

சிக்பள்ளாப்பூர்:

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என்று முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரி மற்றும் முன்னாள் முதல்-மந்திரியுமான வீரப்ப மொய்லி நேற்று முன்தினம் சிக்பள்ளாப்பூருக்கு வந்தார். அவர் சிக்பள்ளாப்பூர் டவுனில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் சிக்பள்ளாப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 2 முறை வெற்றிபெற்று இருக்கிறேன். கடந்த 2019-ம் ஆண்டு ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் அப்போது நான் தோல்வி அடைந்தேன்.

காங்கிரஸ் அலை வீசுகிறது

ஆனால் இந்த முறை நாடு முழுவதும் காங்கிரஸ் அலை வீசுகிறது. அடுத்த ஆண்டு(2024) மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது கட்சி மேலிடம் எடுக்கும் முடிவை பொறுத்து இருக்கும். இந்த விஷயத்தில் கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது.

நான் எனது கடைசி மூச்சு வரைக்கும் சிக்பள்ளாப்பூர் மக்களுக்காக சேவை செய்வேன். காங்கிரஸ் கட்சி அறிவித்த உத்தரவாத திட்டங்கள் அனைத்தும் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளன.

சாதக-பாதகங்கள்...

அந்த திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் பல்வேறு பொய்யான தகவல்களையும், மக்களை திசைதிருப்பும் வகையிலும் தேவையில்லாமல் பேசி வருகிறார்கள். உத்தரவாத திட்டங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து, அதன் சாதக-பாதகங்கள் குறித்து நன்கு ஆலோசித்த பிறகுதான் காங்கிரஸ் கட்சி அவற்றை அமல்படுத்தி உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதே எனது 100 சதவீத ஆசை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story