அமெரிக்க மாணவர் விசா 5-ல் ஒன்று இந்தியருக்கு வழங்கப்பட்டது: அமெரிக்க தூதர்


அமெரிக்க மாணவர் விசா 5-ல் ஒன்று இந்தியருக்கு வழங்கப்பட்டது: அமெரிக்க தூதர்
x

2022-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கான மாணவர் விசாவானது 5-ல் ஒன்று இந்தியருக்கு என்ற அளவில் வழங்கப்பட்டது என அமெரிக்க தூதர் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, 2022-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கான மாணவர் விசாவில் 5-ல் ஒன்று இந்தியருக்கு வழங்கப்பட்டது.

உலகில் 5-ல் ஒருவருக்கு என்பது, உலக அளவில் இந்திய மக்கள் தொகையுடனான ஒப்பீட்டளவில் இந்த விகிதம் அதிகம் ஆகும் என கூறியுள்ளார்.

அதனால், இந்தியர்கள் அமெரிக்காவில் படிப்பை தொடர்வது மட்டும் அல்லாமல், பல தசாப்தங்களாக அவர்கள் தங்களது திறமையை அமெரிக்காவில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதனுடன், எங்களுடைய வரலாற்றில் மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை அதிக எண்ணிக்கையில் பரிசீலனை நடைமுறையை மேற்கொண்டு வருபவர்களாக நாங்கள் இருந்து வருகிறோம் என கார்செட்டி கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின்போது, வெளிநாடுகளில் படித்து வந்த மாணவர்கள் பலர் சொந்த நாடு திரும்பினர். இதன்பின்பு, இரண்டரை ஆண்டுகளாக அமெரிக்காவில் தொடர்ந்து தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

எனினும், சமீப காலங்களாக கொரோனா பரவல் அந்நாட்டில் குறைந்தது. இதனை தொடர்ந்து, கடந்த மே மாதம் முதல் கொரோனா தளர்வுகளை அறிவிக்கும் முடிவுக்கு அமெரிக்க அரசு முன்வந்தது.


Next Story