சந்திரயான் -3 விண்ணில் ஏவுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் - அமெரிக்கா


சந்திரயான் -3 விண்ணில் ஏவுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் - அமெரிக்கா
x

அமெரிக்காவும் இந்தியாவும் தனித்துவமான கூட்டாண்மையைக் கொண்டுள்ளன. பருவகால மாற்றத்தை சமாளிக்க இந்தியா- அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டில் பங்கேற்ற இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறியதாவது:-

சந்திரயான் 3 விண்கலத்தை நாளை விண்ணில் ஏவுவதை அமெரிக்கா ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இஸ்ரோவின் முயற்சியால், நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் உலகின் 4வது நாடாக இந்தியா மாறும்.

பருவநிலை மாற்றத்தால் பல்வேறு பிரச்சினைகளை மனிதர்கள் சந்திக்கின்றனர். பருவகால மாற்றத்தை சமாளிக்க இந்தியா- அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட 130 வெவ்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்தோ-அமெரிக்க உறவை உலகின் மிக முக்கியமான உறவு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுக்கிறார்.

அமெரிக்கா உறவு எப்பொழுதும் ஆழமான நம்பிக்கை மற்றும் நட்பை அடிப்படையாகக் கொண்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story