ரேன்சம்வேர் தாக்குதல் : 300-க்கும் மேற்பட்ட வங்கிகளின் சேவை பாதிப்பு


ரேன்சம்வேர் தாக்குதல் :  300-க்கும் மேற்பட்ட வங்கிகளின் சேவை பாதிப்பு
x

ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட கூட்டுறவு மற்றும் சிறு வங்கிகளின் சேவை முடங்கியது.

புதுடெல்லி,

இந்தியாவில் சிறிய வங்கிகளுக்கு தொழில்நுட்ப அமைப்புகளை வழங்கும் சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் என்ற மென்பொருள் நிறுவனம் ரேன்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளானது. இதன் காரணமாக குஜராத் மாநிலத்தில் உள்ள 17 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் உட்பட நாடு முழுவதும் சுமார் 300 சிறிய வங்கிகளின் சேவை பாதிக்கப்பட்டது.

இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கவோ, யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவோ முடியாமல் தவித்தனர். இது குறித்து விளக்கம் என்.சி.பி.ஐ, சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மென்பொருள் சேவையை தற்காலிகமாக தனிமைப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.

சி-எட்ஜ் மூலம் சேவை பெறும் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலாது என்றும் தேசிய கட்டண உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரேன்சம்வேர் தாக்குதலால் பிற வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றும் இதுவரை நிதி இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story