தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் 2023-ல் நிறைவடையும் என தகவல்
தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் 2023 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என இந்திய விமான நிலையங்களின் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தூத்துக்குடி விமான நிலையம் மேம்படுத்தும் பணிகளை இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (AAI) மேற்கொண்டு வருகிறது. இதில் ஏ-321 வகை விமானங்களை இயக்குவதற்கான ஓடுபாதை நீட்டிப்பு, புதிய முனையத்தின் கட்டுமானம், புதிய தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட கட்டுமானங்கள் ரூ.381 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என இந்திய விமான நிலையங்களின் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கு 13,500 சதுர அடியில் புதிதாக அமைய உள்ள முனையம், ஒரே நேரத்தில் 600 பயணிகளை கையாளும் வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story