உ.பி: வந்தே பாரத் தொடக்க நிகழ்வில் தண்டவாளத்தில் விழுந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ


உ.பி: வந்தே பாரத் தொடக்க நிகழ்வில் தண்டவாளத்தில் விழுந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ
x

இட்டாவாவில் ஆக்ரா- வாரணாசி வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற்றது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் வந்தே பாரத் ரெயில் தொடக்க நிகழ்வில் கூட்டநெரிசலால் பாஜக பெண் எம்.எல்.ஏ ரெயில் தண்டவாளத்தில் விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்ரா-வாரணாசி இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். ரெயில்வே மந்திரி ரவ்னீத் சிங் பிட்டு ஆக்ராவில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்தநிலையில், இந்த நிகழ்வின்போது இட்டவா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சரிதா படோரியா கலந்துகொண்டார். அப்போது கொடியசைத்து துவக்கி வைக்கும்போது சரிதா படோரியா (வயது 61) நடைமேடையில் கூட்டம் நெரிசல் காரணமாக திடீரென ரெயில் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாலை 6 மணியளவில் நடைமேடையில் கூட்டம் அதிகமாக இருந்தநிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வீடியோவில், நடைமேடையில் ஏராளமானோர் பச்சைக் கொடியை ஏந்தியபடி இருந்த நிலையில், பாஜக பெண் எம்எல்ஏவும் கூட்டத்தில் ஒருவராக பச்சைக் கொடியை ஏந்தியப்படி நின்றுக்கொண்டிருந்தார். பின்னர் தண்டவாளத்தில் தவறி விழுந்த எம்.எல்.ஏ.வை பாதுகாவலர்கள், கட்சி தொண்டர்கள் சேர்ந்து உடனடியாக மீட்டனர். அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பாஜக பெண் எம்.எல்.ஏவை பாதுகாவலர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தற்போது வீட்டில் ஓய்வு எடுத்துவருவதாகவும் உடலில் இந்தவித காயமும் இல்லை. நலமுடன் இருப்பதாகவும் சரிதா படோரியா தெரிவித்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story