காங்கிரசின் பொருளாதார சீர்திருத்தங்களை "அரைவேக்காடு" என விமர்சித்த நிர்மலா சீதாராமன்- ப. சிதம்பரம் பதிலடி


காங்கிரசின் பொருளாதார சீர்திருத்தங்களை அரைவேக்காடு என விமர்சித்த நிர்மலா சீதாராமன்-  ப. சிதம்பரம் பதிலடி
x

Image Courtesy: PTI 

தினத்தந்தி 16 Sept 2022 4:49 PM IST (Updated: 16 Sept 2022 4:50 PM IST)
t-max-icont-min-icon

மன்மோகன் சிங் 1991-ல் எடுத்த சீர்திருத்தங்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விமர்சித்து இருந்தார்.

சென்னை,

மத்திய நிதி மந்திரியாக கடந்த 1991 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் மேற்கொண்ட பொருளாதார சீர்த்திருங்கள் அரைவேக்காடுத்தனமானது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார். இதற்கு முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற பாஜக கட்சி நிகழ்ச்சியின் போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், "நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது 1991-ல் எடுத்த சீர்திருத்தங்கள் "அரைவேகக்காடாக" இருந்ததாகக் கூறினார்.

இதற்கு இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி சிதம்பரம், " 1991 சீர்திருத்தங்களை அரைவேக்காடு என நிதி மந்திரி கூறியதாக தெரிகிறது. இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

ஏனென்றால் டாக்டர் மன்மோகன் சிங், பணமதிப்பிழப்பு, பல-விகித ஜிஎஸ்டி மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் போன்ற மிதமிஞ்சி சமைக்கப்பட்ட மற்றும் சுவையற்ற உணவு எதையும் வழங்கவில்லை" என டுவீட் செய்துள்ளார்.


Next Story