மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் சொத்து மதிப்பு ரூ.2.79 கோடி- பிரமாண பத்திரத்தில் தகவல்
நிர்மலா சீதாராமனுக்கு அசையும், அசையா சொத்துகள், டெபாசிட் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 75 ஆகும்.
பெங்களூரு,
பெங்களூரு, கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதனுடன் தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளார். அதில் வருமான வரி தாக்கல் செய்த விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
அவரிடம் மொத்தம் ரூ.63 லட்சத்து 39 ஆயிரத்து 196 அளவுக்கு அசையும் சொத்துகள் உள்ளன.தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் குன்ட்லூர் கிராமத்தில் 4,806 சதுர அடி நிலம் உள்ளது. அதன் இன்றைய மதிப்பில் ரூ.17 லட்சத்து 8 ஆயிரத்து 800 ஆகும். அவரிடம் மொத்தம் ரூ.1 கோடியே 87 லட்சத்து 60 ஆயிரத்து 200 அசையா சொத்துகள் உள்ளன. ரூ.30 லட்சத்து 44 ஆயிரத்து 838 அளவுக்கு கடன் உள்ளது. நிர்மலா சீதாராமனுக்கு அசையும், அசையா சொத்துகள், டெபாசிட் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 75 ஆகும்.