குவாலியர் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் - மத்திய மந்திரி அமித் ஷா


குவாலியர் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் - மத்திய மந்திரி அமித் ஷா
x

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய மந்திரி அமித்ஷா இன்று அடிக்கல் நாட்டினார்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் மற்றும் புதிய முனையம் கட்டும் பணிகளுக்கு மத்திய மந்திரி அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

குவாலியர் விமான நிலையத்தில் ரூ.446 கோடி மதிப்பில், சுமார் 20 ஆயிரம் சதுர பரப்பளவில் புதிய விமான முனையம் கட்டப்பட உள்ளது. தற்போது உள்ள விமான நிலைய முனையம் 3 ஆயிரத்து 500 சதுர பரப்பளவில் அமைந்துள்ளது.

விமான நிலைய விரிவாக்கத்திற்கு பிறகு 13 விமானங்களை இங்கு நிறுத்தலாம் என விமான நிலைய அதிகாரி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய வேளாண்மைத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story