மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 53-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்


மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 53-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்
x

கோப்புப்படம் 

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 53-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

மத்தியில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு முதல்முறையாக இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு தொடர்ந்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 53-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி 52-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் 8 மாத இடைவெளிக்குப் பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து மாநில அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி விகிதத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

மேலும் இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான வரிவிதிப்பு மற்றும் உரங்கள் மீதான வரியைக் குறைப்பதற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story